Monday 13 October 2014

சிவபெருமானும் இட்டிலியும்!



தமிழுலகம் ஏற்றிப் போற்றுகிற வாகீச கலாநிதி கி.வா.ஜ. அண்மைக் காலத்தில் வாழ்ந்த "காளமேகம்' என அறுதியிட்டுச் சொல்லலாம். ÷சிவபெருமானுக்கும், இட்டிலிக்கும் அவர் பாடியுள்ள சிலேடைப் பாடல், அவர் புலமையையும், அன்னைத் தமிழின் அருமையையும் ஒருசேர உணர்த்துகிறது.

ஆட்டியபின் ஆவியிலே பக்குவம்கண்டு அங்குஎடுக்கும்
ஈட்டால், பொடி வெண்மை ஏய்வுறலால் - போட்ட இலை
மேல்உறலால், சாம்பாரில் மேவி இன்பம் தந்திடலால்
கோலும் அரன் இட்டிலியாய்க் கொள்''

> உயிர்களைப் பிறக்க வைத்து, அவ்வுயிர்களின் பக்குவம் அறிந்து மேற்கதி (முக்தி-வீடுபேறு) தருகிறார் சிவபெருமான் என்பதை ""ஆட்டியபின் ... ஈட்டால்'' எனும் தொடர் விளக்குகிறது.
> அதே தொடர் மாவை ஆட்டிய பிறகு ஆவியிலே வேகவைத்துப் பக்குவம் அறிந்து இட்டிலியை எடுப்பதையும் குறிக்கிறது.
> திருநீறு துலங்க சிவன் பொலிவதையும், ""பொடி வெண்மை ஏய்வுறலால்'' என்பது குறிக்கிறது.
> அர்ச்சித்த வில்வ இலையோடு சிவன், வாழையிலை மேல் இட்டிலி - இது ""போட்ட இலை மேலுறலால்'' என்பதைக் குறிக்கிறது.
> சாம் பாராகிய சுடலையில் சிவன் - சாம்பாரில் இட்டிலி என்பதை இறுதித் தொடர் விளக்குகிறது.


இனி இட்டிலி சாப்பிடும்போது இட்டிலி சுவையோடு கி.வா.ஜ.வின் இன்தமிழ் சுவைவையும் சேர்த்து இரட்டிப்பாக அனுபவிக்கலாம்!

No comments:

Post a Comment