Monday 13 October 2014

முருகன் - 60 ருசிகரத் தகவல்கள்

1. முருகனின் திருவுருவங்கள்:

1, சக்திதரர்,
2. கந்த சுவாமி,
3. தேவசேனாதிபதி,
4. சுப்பிரமணியர்,
5. கஜவாகனர்,
6. சரவணபவர்,
7. கார்த்திகேயர்,
8. குமாரசுவாமி,
9. சண்முகர்,
10. தாரகாரி,
11. சேனாபதி,
12. பிரமசாத்தர்,
13. வள்ளி கல்யாண சுந்தரர்,
14. பாலசுவாமி,
15. கிரவுஞ்ச பேதனர்,
16. சிகிவாகனர் எனப்படும்.

2. முருகன் அழித்த ஆறு பகைவர்கள்ஆணவம், கன்மம், குரோதம், லோபம், மதம், மாற்சர்யம்.

3. முருகனைப் பூஜிப்பதால் சிறப்புப் பெற்ற தலம் மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள திருவிடைக்கழி. இங்கு முருகப்பெருமானுக்குப் பின்புறம் சிவலிங்கம் உள்ளது. (குரா மரத்தடியில் முருகன் பூஜித்தது) அது போல் திருவேற்காட்டில் வேலமரத்தடியில் முருகன் பூஜித்த சிவலிங்கம் முருகனுக்கு முன்புறமாக உள்ளது.

4. முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும்.

1. சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர்,
2. தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம்,
3. இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.

5. திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலவரின் நெஞ்சில் சிறிய பள்ளம் இருக்கின்றது. சூரனை வதம் செய்யும் போது அவனோடு மோதியதால் இப்பள்ளம் ஏற்பட்டது.

6. செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும். இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

7. முருகப்பெருமானின் வலப்புறம் உள்ள ஆறு கரங்களில் அபயகரம், கோழிக்கொடி, வச்சிரம், அங்குசம், அம்பு, வேல் என்ற ஆறு ஆயுதங்களும், இடப்புறம் உள்ள ஆறு கரங்களில் வரமளிக்கும் கை, தாமரை, மணி, மழு, தண்டாயுதம், வில் போன்றவையும் இருக்கும்.

8. ஈரோடு அருகே வெண்ணைமலை உள்ளது. அங்கு முருகன் யார் துணையும் இல்லாமல் தன்னந்தனியாகத் தண்டாயுதபாணியாகக் காட்சிய ளிக்கிறார். வெண்ணெய் மலையை வலம் வருபவர்கள் கயிலையை வலம் வந்த பலனைப் பெறுவார்கள்.

9. முருகன் இறைபணிச் செல்வர்கள்:

1. அகத்தியர்,
2. அருணகிரி நாதர்,
3. ஒளவையார்,
4. பாம்பன் சுவாமிகள்,
5. அப்பர் அடிகளார்,
6. நக்கீரர்,
7. முசுகுந்தர்,
8. சிகண்டி முனிவர்,
9. குணசீலர்,
10. முருகம்மையார்,
11. திருமுருககிருபானந்த வாரியார்,
12. வள்ளிமலைச் சுவாமிகள்,

ஆகியோர் ஆவார்கள்.

10. திருப்பங்குன்றத்தில் பிரம்மகூபம் என்று அழைக்கப்படும் சந்தியாசிக் கிணற்று நீரே முருகப் பெருமானுக்கு அபிஷேகத்திற்காகப் பயன்படுகின்றது. இக்கிணற்று நீரில் குளிப்போருக்கு முருகனது அருளால் வெண்குஷ்டம், நீரிழிவு போன்ற நோய்களும் நீங்குகின்றன என்பது அதிசயமாகும்.

11. திருச்செந்தூரில் நடைபெறும் ஆவணித் திருவிழாவின் 7-ஆம் நாள் விழாவில் தங்கப் பல்லகக்கில் எழுந்தருளும் முருகப் பெருமான் முன்புறம் ஆறுமுகனின் தோற்றத்திலும், பின்புறம் நடராஜர் தோற்றத்திலும் காட்சி அளிப்பார்.

12. கந்தபுராணத்தில் வரும் சுப்பிரமணிய ஸ்தோத்திரம் தினசரி அதிகாலையில் படிப்பவர்களது அனைத்துப் பாவங்களும் நிவர்த்தியாகும்.

13. முருகப் பெருமானை வணங்கத் திதி, சஷ்டி, விசாகம், கார்த்திகை, திங்கள், செவ்வாய், ஆகிய உகந்த நாட்கள் ஆகும்.

14. முருகன் கங்கையால் தாங்கப்பட்டான். இதனால் காங்கேயன் என்று பெயர் பெற்றான். சரவணப் பொய்கையில் உதித்தான். ஆகையினால் சரவண பவன் என்று அழைக்கப்பட்டான். கார்த்திகை பெண்களால் வளர்க்கப்பட்டதால் "கார்த்திகேயன்'' என்றும் சக்தியினால் ஆறு உருவமும் ஓர் உருவமாக ஆக்கப்பட்டதால் கந்தன் என்றும் பெயர் கொண்டான்.

15. குமரக்கோட்டம் என்பதே சண்முகப் பெருமானின் வாசஸ்தலமாகும். இது காஞ்சீபுரத்தில் உள்ளது.

16. வேலன், கந்தன், சுப்பிரமணியன், கார்த்திகேயன், சரவணபவன், குமரன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவசேனாபதி, சேனாதிபதி, காக வாகனம், மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பாலசுவாமி, சிகிவாகனன், வள்ளி கல்யாண சுந்தரன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் ஆகியவை முருகனின் வேறு பெயர்களாகும்.

17. கந்தப் பெருமானின் புகழ் சொல்லும் நூலான "திருப்புகழ்'' நூலினை இயற்றியவர் அருண கிரிநாதர்.

18. "முத்தமிழால் வைதாரையும், வாழ வைப்பான் முருகன்'' என்று அருட்கவி அருணகிரி பாடியுள்ளார்.

19. அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான்.

20. அதர்வண வேதத்தில் முருகன் அக்கினியின் புதல்வன் எனவும், சதமத பிராமணத்தில் ருத்திரனின் புதல்வன் எனவும் சித்திரிக்கப்பட்டுள்ளான்.

21. முருகனைக் குறித்துக் "குமார சம்பவம்'' என்கிற பெயரில் காவியம் இயற்றியவர் மகாகவி களிதாசர்.

22. யானை மேல் வீற்றிருக்கும் முருகன் உருவம் மாமல்லபுரத்துப் பாறைகளில் செதுக்கப்பட்டுள்ளது.

23. கதம்ப அரசர்கள் கார்த்திகேயனை வழிபட்டனர்.

24. முருகப் பெருமானின் திருவருளால் சாப விமோசனம் பெற்ற பராசர முனிவரின் ஆறு புதல்வர்கள் தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி முதலியோர் இவர்கள் மீனாய் இருந்து, முருகன் அருளால் மீண்டும் மனிதர் ஆகினர்.

25. முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

26. முருகனே திருஞான சம்பந்தராய் அவதாரம் செய்தார் என்று பலர் பாடியுள்ளனர்.

27. பிரமசரிய-கிருகஸ்த-சந்நியாசக் கோலங்களில் முருகனை மட்டுமே காண முடியும். பிற கடவுள்களுக்கு இல்லாத சிறப்பு இது.

28. தமிழகத்தில் முருகனுக்குக்குடவரைக் கோயில்கள் உள்ள இடங்கள் கழுகுமலை, திருக்கழுக்குன்றம், குன்றக்குடி, குடுமியான்மலை, சித்தன்னவாசல், வள்ளிக் கோயில், மாமல்லபுரம்.

29. முருகக் கடவுளின் அடையாளப் பூ காந்தள் மலர்க் கண்ணியாகும்.

30. கந்தர் சஷ்டித் திருவிழா வேதியர், சைவர், முனிவர் ஆகிய பெருமக்கள் எல்லாரும் மகிழ்ந்து ஏற்றுக் கொண்டாடி வரும் திருவிழா ஆகும்.

31. தமிழ் மண்ணில் முருகன் குறிஞ்சி நிறக் கடவுள் என்றும், செந்நிற மேனியன், சேவற்கொடியோன், சூரியனுக்கு ஒப்பானவன் என்றும் பேசப்படுகின்றார்.

32. பசிபிக், சிஷில்ஸ், பிஜி, மடகாஸ்கர் நாடுகளிலும் முருகன் வழிபாடு உள்ளது.

33. மலைகளில் குடி கொண்டுள்ள குமரனுக்குச் சிலம்பன் என்றோரு பெயர் உள்ளது.

34. முருகனுக்கு விசாகன் என்றும் ஒரு பெயர் உண்டு. விசாகன் என்றால் மயிலில் சஞ்சரிப்பவன் என்பது பொருளாகும்.

35. முருகனின் கோழிக் கொடிக்கும் குக்குடம் என்றோர் பெயருண்டு. இந்தக் கோழியே வைகறைப் பொழுதில் ஒங்கார மந்திரத்தை ஒளி வடிவில் உணர்த்துவது ஆகும்.

36. பொருள், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்கிற ஆறு குணங்களே ஆறுமுகம்.

37. பல்லவ மன்னர்கள் முருகனைப் பரம பாகவதன், பரம மகேஸ்வரன், பரம வைஷ்ணவன், பரம பிரம்மண்யன் என்று அழைத்தார்கள் என்று செப்பேடுகள் கூறுகின்றன.

38. எத்தனை துன்பம் எதிர் கொண்டு வந்தாலும் சரவணப் பொய்கையில் நீராடிய நொடிப் பொழுதிலேயே துன்பங்கள் எல்லாம் தொலைந்து போகும் என்று முருகன் கோயிலின் திருக்குளம் குறித்துத் தணிகையாற்றுப் படை கூறுகின்றது.

39. வட அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஜெர்மன், இலங்கை, பாரிஸ், ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் முருகன் கோவில்கள் உள்ளன.

40. முருகப் பெருமானுக்கு உகந்த மலர்கள் முல்லை, சாமந்தி, ரோஜா, காந்தன் முதலியவை ஆகும்.

41. முருகனை ஒரு முறையே வலம் வருதல் வேண்டும்.

42. முருகனைப் போன்று கருப்பை வாசம் செய்யாத வேறு தெய்வம் வீரபத்திரர்.

43. பத்துமலை என்ற பெரியமலை மீது முருகன் உள்ளார். இந்த கோயில் (மலேசியா), கோலாலம்பூரில் இருந்து 18 கி.மீ. தூரத்தில் உள்ளது. தைப்பூசம் இங்கு விசேஷம்.

44. முருகப் பெருமானுக்காகக் கட்டப்பட்ட முதல் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒற்றைக் கண்ணூர்த் திருக்கோவில் ஆகும். முதலாம் ஆதித்த சோழன் இதனைக் கட்டினான். இந்தக் கோவிலில் முருகனுக்கு யானை வாகனமாக உள்ளது. ஒரு திருக்கரத்தில் ஜபமாலையும், மறுகையில் சின்முத்திரையும் கூடிய நிலையில் இங்கே அருள் பாலிக்கிறார்.

45. சிறுவாபுரி சென்னை-நெல்லூர் வழியில் பொன்னேரிக்கு 20 கி.மீ. தூரமுள்ளது புதுமனை புகுவோர் முன்னர் இவ்வூரில் முருகனுக்குப் பால் அபிஷேகம் செய்தால் வீட்டில் சகல சவுபாக்கியங்களும் முருகனால் உண்டாகும்.

46. சிவகாசி அருகே 51 படிக்கட்டுகள் கொண்ட மலைமீது முருகன் கோவில் உள்ளது. 108 வைஷ்ணவத் திருப்பதிகளில் ஒன்று இது. இங்கு சிவன் கோவிலும் உண்டு. இந்த தலத்தின் பெயர் திருத்தங்கள் ஆகும்.

47. தமிழ்நாட்டில் முதல் தங்கத்தேர் பழனி முருகன் கோவிலில் 1957-ல் இழுக்கப்பட்டது.

48. முருகனுக்கு உருவமில்லாத கோவில் விருத்தா சலத்தில் உள்ளது. பெயர் கொளஞ்சியப்பர். அருவுருவ நிலைப் பிரார்த்தனை தலம் என்று இத னைக் கூறுவார்கள்.

9. கந்தர் சஷ்டி கவசத்தை எழுதியவர் தேவராயன் ஆவார்.

50. முருக வழிபாடு என்பது ஷண்மதம் என்று சொல்லப்படுகின்றது.

51. கோபுரத்து இளையனார் என்கிற முருகன் சந்நிதி திருவண்ணாமலையில் உள்ளது.

52. முருகன் வீற்றிருக்கும் மிக நீண்ட மலை திருத்தணி பள்ளிப்பட்டு ரோட்டில் அமைந்துள்ள நெடியமலை ஆகும்.

53. முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார். இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது.

54. கந்தனுக்குரிய விரதங்கள்:
1. வார விரதம்,
2. நட்சத்திர விரதம்,
3. திதி விரதம்.

55. முருகனின் மூலமந்திரம் ஓம் சரவணபவாய நம என்பதாகும்.

56. வேலும் மயிலும் இல்லாத வேலவன் ஆண்டார் குப்பத்தில் உள்ளார்.

57. முருகப் பெருமான் தோன்றிய இடம் சரவணப் பொய்கை.

58. வேடுபறி என்பது முருகப் பெருமான் வள்ளியைச் சிறை எடுத்ததைக் கொண்டாடும் விழாவாகும்.

59. பொன்னேரிக்கு அருகில் உள்ள பெரும்பேடு முருகன் கோவிலில் முருகன் 6 அடி உயரத்தில் உள்ளார். இங்கு தெய்வானை கிரீடத்துடனும் வள்ளிக் குறத்தி கொடையுடனும் காட்சி தருகிறார்கள். இப்படி வேறு எங்குமில்லை.

60. முருகப் பெருமானின் திருவடி பட்ட இடம் ஞானமலை ஆகும்.

புறநானூறும் சிவபெருமானும்




புத்துணர்வும் புதுவாழ்வும் பெறத் துடிக்கும் தமிழ்மக்களுக்குப் புறநானூறு ஓர் ஒப்பற்ற அறிவுச் சுரங்கம். அதில் கடவுள் வாழ்த்தாக அமைவது ‘அருந்தவத்தோன்’ ஆகிய சிவபெருமானைப் பற்றியது.
இதனைப் பாடியவர் ‘பாரதம் பாடிய பெருந்தேவனார்’.

பாடல் : 1 – இறைவனின் திருவுள்ளம்
கண்ணி கார்நறுங் கொன்றை; காமர்
வண்ண மார்பின் தாருங் கொன்றை;
ஊர்தி வால்வெள்ளேறே; சிறந்த
சீர்கெழுகொடியும் அவ்வேறு என்ப;
கறைமிடறு அணியலும் அணிந்தன்று; அக்கறை;
மறைநவில் அந்தணர் நுவலவும் படுமே;
பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத்
தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்;
பிறை நுதல் வண்ணம் ஆகின்று; அப்பிறை
பதிணெண் கணனும் ஏத்தவும் படுமே;
எல்லா உயிர்க்கும் ஏமம் ஆகிய,
நீரற வழியாகக் கரகத்துக்
தாழ்சடை பொலிந்த அருந்தவுத் தோற்றே

பாடலின் விளக்கம்:-
சிவபெருமான் தலையில் சூடிக்கொள்வது கார் காலத்தில் மலரும் கொன்றைப்பூ;
அவனது அழகான வண்ண மார்பில் அணிந்து கொள்வதும் கொன்றைப்பூ.
அவன் பயணம் செய்யும் வாகனம் தூய்மையான வெள்ளை எருது.
அவனது பெருமை பொருந்திய சிறந்த கொடியும் அவ் வெள்ளை எருதே என்பர்.
நஞ்சினது கறை அவனின் கழுத்தை அழகு செய்தலும் செய்தது.
அக் கறை அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்மறையை ஓதும் சான்றோர்களால் புகழவும் படுகிறது.
பெண் உருவை ஒருபாகத்திலே அறியக் காட்டியவன் அவன்.
அவ்வுருவைத் தன்னுள் அடக்கி ஒளித்துத் தானாக அவன் தனித்தும் விளங்குகின்றான்.
அவனது நெற்றிக்கு பிறை வனப்பைத் தருகிறது.
அந்தப் பிறையை பதினெட்டு தேவர்களும் போற்றவும் செய்கிறார்கள்.
எல்லா உயிர்க்கும் காவல் தெய்வம் அவன்.
நீர் வற்றுதல் இல்லாத கமண்டலமும் அவன் கையில் உள்ளது.
தவமுதிர்ச்சியின் அடையாளமாக அவன் தாழ்சடை திகழ்கிறது.

பாடலின் உட்கருத்து :-
சிவமாகிய முழுமுதற்பொருளின் தன்மை மிகவும் போற்றுதற்கரியதாகும். சிவபெருமானுடைய தலையையும் மார்பையும், வாகனத்தையும், கொடியையும் கூறி, அவனுடைய பெருங்கருணையையும் வியந்து பெண்ணும் ஆணும் தானேயாகித் திகழும் தன்மையையும் போற்றுகிறது இந்தச் செய்யுள். அவனைச் சார்ந்த தேய்ந்த பிறையும் பதினெட்டு தேவர்களால் போற்றப்பெரும் பெருநிலை எய்திற்று எனச் சொல்லி அவனை நாமும் அடைந்தால் அதனால் நமக்கும் அத்தகு மேம்பாடு வந்தடையும் எனச் சொல்லாமற் சொல்லி, இத்துணை மேதகு நிலையிலும் அவன் தவத்தோனாக விளங்குகின்றான் எனத் தன்னையுணர்ந்து தனித்து அடங்கும் அழகையும் அறிவுறுத்துகிறது இச் செய்யுள்.

நமசிவய எனும் ஐந்தெழுத்து மந்திரம்.

மந்திரம் என்ற சொல்லிற்கு உரிய இலக்கணங்கள் எல்லாம் அமைந்ததும், எல்லா மந்திரங்களுக்கும் முதன்மையானதும், தமிழன் கொண்ட இறைக் கொள்கை அனைத்தையும் உள்ளடக்கியதும் ஆகிய மந்திரம் ஐந்தெழுத்து ஆகும்.

நமசிவய எனும் ஐந்தெழுத்தில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு பொருளைக் குறிக்கும். அதன் விவரம் வருமாறு:
ந – நடப்பு
ம – மறைப்பு
சி – சிறப்பு
வ –வனப்பு
ய – யாப்பு

இதில்,
நடப்பு – உயிர் உலகில் பிறந்து உலகியல் நடப்பு வாழ்வதைக் குறிக்கும்.
மறைப்பு – அறியும் பொருளான உயிரை அறியாமையாகிய இருள் மறைப்பது குறிக்கப் படுகிறது.
சிறப்பு – எல்லோரும் ஒப்புக் கொள்கிற சிறப்பிற்கெல்லாம் சிறப்பான பரம்பொருளைக் குறிக்கும்.
வனப்பு – பேராற்றல் படைத்த பரம்பொருள் மிகச்சிறிய ஆற்றல் படைத்த உயிருடன் தொடர்பு கொள்ளுவது குறிக்கப்படுகிறது.
யாப்பு – அனுபவம் கொடுத்து உயிருக்கு அறிவை ஏற்றுவதற்காக அல்லது அறியாமையைத் தேய்ப்பதற்காக உயிர் ஓர் உடலில் கட்டப்படுவது குறிக்கப் படுகிறது. யாக்கப்படுவதால் யாப்பு.

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.

1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.

இந்த ஐந்தெழுத்து முதல் மந்திரம் பொதுவானது. எல்லாச் சமயங்களுக்கும் பொருந்துவது. இதைத் தமிழில் ஆக்கியிருப்பதால் தமிழ் மந்திரம் என்றும், இதனை உலகுக்கெல்லாம் பொதுவாக உருவாக்கிய பண்டைய தமிழர்களின் பெருமையையும் ஒருங்கே காணமுடிகிறது.

நமசிவாய வில் வடமொழிப் பித்தலாட்டம்

பஞ்சாட்சரம் (ஐந்து அட்சரம்) எனும் வடமொழிச் சொல் நமது ஐந்தெழுத்து எனும் தமிழ்ச் சொல்லிற்கு ஒரு மொழி பெயர்ப்பே. அவ்வளவுதான். எப்படி ஆங்கிலத்தில் FIVE LETTERS என்று கூறுகிறோமோ அதைப் போல. அதற்கு எந்த இறைக் கொள்கையும் கிடையாது. இன்னும் சொல்லப் போனால் அவர்கள் சொல்லும் அடிப்படையே வேறு.
1. வடமொழியாளர்கள் சொல்வது நமஹ்சிவாய. இதில் ந-1, ம-2, ஹ்-3, சி-4, வா-5, ய-6 என்று ஆறு எழுத்துக்கள் உள்ளன. இதை எப்படி அவர்களால் பஞ்சாட்சரம் – அதாவது ஐந்து எழுத்து என்று சொல்ல முடியும்?

नमःशिवाय

இதில் வரும்: என்ற குறியீடு வடமொழி நெடுங்கணக்கில் ஓர் எழுத்து ஆகும். (அதாவது வடமொழி अ, आ, इ, ई, उ, …) (தமிழில் அ, ஆ, இ, ஈ … போல ).
இதை மறைப்பதற்கு அவர்கள் தமிழ் நமசிவாய வை

நம:சிவாய

என வடமொழி எழுத்தான : சேர்த்து எழுதுகிறார்கள்.
என்ன காரணம் எனில் அதை ஒரு நிறுத்தற்குறியீடு போலக் காட்ட
: இந்த நிறுத்தற்குறியீடு (PUNCTUATION MARK) க்குப் பெயர் முக்காற்புள்ளி (COLON).

(சான்று:-
தமிழ் நிலங்கள் ஐந்து வகை : குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை
இதைப் போன்ற இடங்களில் இந்த நிறுத்தற்குறியீட்டைப் பயன்படுத்துவார்கள்.)

நமசிவாய நடுவில் : எதற்கு?

2. நமஹ்சிவாய எனும் வடமொழிச் சொல் சிவனுக்கு வணக்கம் என்று பொருளில்தான் சொல்லப்படுகிறது. நமது தமிழ் ஐந்தெழுத்து இதை சிவனுக்கு வணக்கம் என்ற பொருளில் சொல்லுவதில்லை. மேலும் ‘சிவனுக்கு வணக்கம்’ என்பது ஒரு வாக்கியமே தவிர ஐந்தெழுத்தாக (அதாவது பஞ்சாட்சரம் ஆக) முடியாது.
(ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள வேத மந்திரங்கள் புத்தகத்தில் உள்ள கீழ்வரும் செய்தியைப் பார்க்கவும்)
யஜுர் வேதம் 4.5.8.1
“ ஓம் நம சம்பவே ச மயோபவே ச நம சங்கராய ச மயஸ்கராய ச நம சிவாய ச சிவதராய ச ஓம் ”
விளக்கவுரை:-
உலக இன்பமாகவும் மோட்ச இன்பமாகவும் இருப்பவரும், உலக இன்பத்தையும் மோட்ச இன்பத்தையும் தருபவரும் மங்கல வடிவினரும், தம்மை அடைந்தவர்களை சிவமயம் ஆக்குபவரும் ஆகிய சிவபெருமானுக்கு நமஸ்காரம்.”
ஆக தமிழ் ஐந்தெழுத்து மூலமந்திரமான நமசிவாய வுக்கும் வடமொழியில் சொல்லப்படும் நமஹ்சிவாய வுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெளிவாகிறது.

சிவபெருமானும் இட்டிலியும்!



தமிழுலகம் ஏற்றிப் போற்றுகிற வாகீச கலாநிதி கி.வா.ஜ. அண்மைக் காலத்தில் வாழ்ந்த "காளமேகம்' என அறுதியிட்டுச் சொல்லலாம். ÷சிவபெருமானுக்கும், இட்டிலிக்கும் அவர் பாடியுள்ள சிலேடைப் பாடல், அவர் புலமையையும், அன்னைத் தமிழின் அருமையையும் ஒருசேர உணர்த்துகிறது.

ஆட்டியபின் ஆவியிலே பக்குவம்கண்டு அங்குஎடுக்கும்
ஈட்டால், பொடி வெண்மை ஏய்வுறலால் - போட்ட இலை
மேல்உறலால், சாம்பாரில் மேவி இன்பம் தந்திடலால்
கோலும் அரன் இட்டிலியாய்க் கொள்''

> உயிர்களைப் பிறக்க வைத்து, அவ்வுயிர்களின் பக்குவம் அறிந்து மேற்கதி (முக்தி-வீடுபேறு) தருகிறார் சிவபெருமான் என்பதை ""ஆட்டியபின் ... ஈட்டால்'' எனும் தொடர் விளக்குகிறது.
> அதே தொடர் மாவை ஆட்டிய பிறகு ஆவியிலே வேகவைத்துப் பக்குவம் அறிந்து இட்டிலியை எடுப்பதையும் குறிக்கிறது.
> திருநீறு துலங்க சிவன் பொலிவதையும், ""பொடி வெண்மை ஏய்வுறலால்'' என்பது குறிக்கிறது.
> அர்ச்சித்த வில்வ இலையோடு சிவன், வாழையிலை மேல் இட்டிலி - இது ""போட்ட இலை மேலுறலால்'' என்பதைக் குறிக்கிறது.
> சாம் பாராகிய சுடலையில் சிவன் - சாம்பாரில் இட்டிலி என்பதை இறுதித் தொடர் விளக்குகிறது.


இனி இட்டிலி சாப்பிடும்போது இட்டிலி சுவையோடு கி.வா.ஜ.வின் இன்தமிழ் சுவைவையும் சேர்த்து இரட்டிப்பாக அனுபவிக்கலாம்!

சிவனை உணரும் வழி!


எந்நாட்டவர்க்கும் இறைவன் – நமது தென்னாடுடைய சிவன் – மாற்ற மனங்கடந்து, ஊர் பேரின்றி, ஆதியந்தமின்றி இருக்கிறான் எனப் போந்தனர்.

அச்சிவனை எப்படி உணர்வது?
சிவன் உணர இயலாத ஒருவனா? என்று ஐயுற இடமுண்டு.
சிவன் “மாற்ற மனங்கடந்தவன்”, “போக்கு வரவுமிலாப் புண்ணியன்”, ஒருநாமம் ஓருருவமில்லாதவன்” என்றருளிய நமது பெரியார், சிவனை உணராது அவ்வுரைகளைப் பகிர்ந்தாரா?
அவர் எங்ஙனம் உணர்ந்தார்? “நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற்றின்மை” என்று உணரும் வழியை அப்பெரியார் காட்டா நிற்கிறாரா?

இறைவன் இயல்பு:
மாற்ற மனங்கடந்த ஒன்றை மாற்ற மனங்கடந்தே பார்த்தல் வேண்டும். போக்கு வரவில்லா ஒன்றை மனஒட்டமில்லாவிடத்திலிருந்தே நோக்கல் வேண்டும். கருவி கரணங்களில்லா ஒன்றைக் கருவிகரணங் கடந்து நின்றே காண்டல் வேண்டும்.
பருவுடல் உணர்வுமட்டுங்கொண்டு “மாற்ற மனங்கடந்த இறைவன் எங்கே” என்றால், எங்கே, எங்கே என்றுதான் ஏங்கியொழிதல் வேண்டும்.
“உரையுணர்வு இறந்துநின்று உணர்வதோர் உணர்வே” என் வரூஉம் இன்னுரையை உற்று உற்று ஊன்றி ஊன்றி நோக்குவாமாக.
“உணர்வதோர் உணர்வே” என்று முழுமுதற்பொருளை நம் பெருமான் விளிக்கிறார். எந்நிலையில் நின்று அச்செம்பொருளை உணர்வது என்பதை அன்பர் உலகிற்கி உணர்த்தாமற் போகவில்லை.

அந்நிலை எது?
“உரையுணர்வு இறந்து நிற்கும் நிலை” என்று அடிகள் அறிவுறுத்துகிறார். அப்பெருநிலையே நினைப்பற நினைக்கும் நிலையென்க. நினைப்பற நினைக்கும் நிலையில் “இறைவனல்லால் பிறிதுமற்றின்மை” என்னுங்காட்சி பெறுதல் கூடும். இந்நிலை நின்றே மாணிக்கவாசகனார் “நினைப்பற நினைந்தேன் நீயலால் பிறிதுமற்றின்மை” என்று இறைவனுண்மையை இனிதெடுத்துரைக்கிறார்.
நினைப்பற நினைக்கும் ஒரு நிலை; பருவுடல் நுண்ணுடல் கடந்த ஒரு நிலை; கன்மம் தேய்ந்து ஆணவம் ஒடுங்கும் ஓர் உணர்வுநிலை. அந்நிலையில் இறைவன் திருவருள் பதியும். அத்திருவருளால் இறைவன் யாண்டும் நீக்கமற நிறைந்து நிற்கும் உண்மையை உணரக் கூடும்.
“இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதியுங் காட்டொணாதே” என்ற அப்பரம்பெருமானார், “அவனருளே கண்ணாகக் காணினல்லால் இந்நிறத்தன் காட்டொணாதே” என்று ஆன்டவன் அருளால் அவணுன்மை உணர்தலைத் தெரிதல் காண்க. “அவனருளாலே அவன் தாள் வணங்கி” என்றார் மணிவாசகரும்.

அகக்கண்:
ஆண்டவனருளால் அகக்கண் திறக்கப் பெற்ற மெய்யடியார்கட்கு இயற்கையினூடே ஆண்டவன் நீக்கமற நிறைந்து நிற்றல் செவ்விதிற் புலனாகும். அக்கண் திறக்கப் பெறாதார்க்கு அந்நிறைவு புலனாதலில்லை. இறைவனுக்கு, இயற்கை உடலாகப் பொலிதலை மெய்யடியார்கள் சாத்திர வாயிலாகவும், தோத்திர வாயிலாகவும் உலகிற்குப் பலபட விளக்கிப் போந்தார்கள்.

காவியங்கள் முதலியன:
இயற்கை இறைவன் வடிவம் என்பதை உணர்த்த உலகில் எழுந்த பாக்கள் எத்தனை! காவியங்கள் எத்தனை! நாடகங்கள் எத்தனை! அப்பாக்களையும் காவியங்களையும் நாடகங்களையும் படிக்கப் படிக்க, அவைகளின் அழகில் அறிவு படியப்படிய, கருவிகரணச் சேட்டைகள் ஒடுங்கி இயற்கை வடிவான இறை இன்பத்தில் திளைக்கும் பேறு பெறலாம். கதைகட்கு மட்டுங் காவியங்களைப் படித்தலால் விளையத்தக்க பயன் விளையாது.

தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்!

தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்!

“தென்னாடுடைய சிவனே போற்றி! – எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் பெருமொழியின் பொருள் வெள்ளிடைமலை. தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவன் என்பது அத்திருவாசகத்தின் கருத்து.

எந்நாட்டுக்கும் இறைவன் ஒருவனே. அவ்வொருவனுக்குப் பல நாட்டு மொழிகளில் பல பெயர்கள் வழங்குகின்றன. அப்பன்மைப் பெயர்கள் பெரிதும் அவ்வவ்நாட்டின் இயற்கை நிலையையொட்டிப் பிறந்திருத்தல் வேண்டும். பெயர் பல கொண்டு கடவுளர் பலர் என்னும் முடிவுக்கு வருதல் அறியாமை.

“ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரந்திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ” என்றார் மாணிக்கவாசகர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றார் திருமூலர்.

சிவம்:

தென்னாட்டவராகிய நாம் இறைவனைச் சிவம் என்னும் செம்மொழியால் வழுத்துகிறோம். தென்மொழிவல்லார் சிவம் என்பதற்குச் செம்மையென்று பொருள் கூறுகிறார். செம்மை யெனுஞ்சொல் பல பொருளுடையது. ஈண்டு எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்பச்செம்மை யன்பதற்குச் செந்நிறம் என்னும் ஒரு பொருளை மட்டும் கொள்கிறேன்.


தென்னாட்டார் பரம்பொருளைச் செந்நிறமாகக் கண்டு, அதனைச்சேயென்றுஞ் சிவமென்றும் போற்றலாயினர். இதற்குக் காரணமென்ன?

இறையும் இயற்கையும்:

இறைவன் ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாதவன். அவன் அறிவாய் யாண்டும் நீக்கமற நிற்பவன். “இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று எழுதியுங்காட்டொணாதே” என்றார் அப்பர் சுவாமிகள்.


இத்தகைய அறிவுப் பொருளின் உண்மையை எங்ஙனம் உணர்வது? அதன் வடிவான இயற்கையைக் கொண்டே அதன் உண்மையையுணர்தல் வேண்டும். இயற்கை இறைவனது உடல். அவ்வுடலுள் உயிராயிருப்பவன் இறைவன். நமது உடலுள் உயிர் எங்ஙனம் நிலவுகிறதோ அங்ஙனே இயற்கையுள் இறைவன் நிலவுகிறான். கண்கூடாகக் காணும் நமது உடலைக்கொண்டே நமது உயிருண்மை உணர்கிறோம். அதுபோலவே கண்கூடாகக் காட்சியளிக்கும் இயற்கை வடிவங்களைக் கொண்டே இறையுண்மை உணரல் வேண்டும். இயற்கைவழி இறைவனை உணர்ந்தவரே ஞானிகளெனப்படுவர்.

இயற்கையில் வெம்மை:

இயற்கை முதல் ஒன்றாயினும், அது காரியப்படும்போது பல இயல்புடையதாய்ப் பரிணமிக்கிறது. நமது நாட்டின் இயற்கை நிலை என்ன? நமது நாடு வெம்மை செறிந்த நாடு என்று எவருங் கூறுவர்.

நிரட்ச ரேகை (EQUATOR) நமது நாட்டின் பாங்கர் பாய்ந்து செல்கிறது. அக்கோட்டின் பாங்கருள்ள நாடுகள் வெம்மை செறிந்தனவாயிருத்தல் இயல்பு. நமது நாட்டின் காரியங்களைத் துருவித் துருவி ஆய்ந்து ஆய்ந்து சென்றால் அவைகளின் காரணங்கள் யாவும் வெம்மை மயமாயிருத்தல் பெறலாம். அவ்வியற்கை வெம்மை வழி இறைவனை நமது நாட்டு பெரியோர்கள் உணர்ந்தார்கள்.

இறைவனுடல் இயற்கை யென்று மேலே சொல்லப்பட்டிருக்கிறது. நமது நாட்டின் இயற்கையோ வெம்மையை அடிப்படையாகக் கொண்டது. ஈண்டு இறைவனுக்குரிய இயற்கை வடிவம் எத்தகையதாயிருத்தல் வேண்டும் என்று உன்னுவோமாக.

தீவண்ணம்:

அதனை வெம்மைக்குரிய நெருப்பு வடிவமென்று விளக்க வேண்டியதில்லை. அந்நெருப்பு மேனியைப் பெரியோர்கள் பலவாறு புகழ்ந்து போற்றியிருக்கிறார்கள். அவ்வுரைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும்.

மாணிக்கவாசகனார் அருளிய திருவாசகத்தினின்றுஞ் சில பொன்மொழிகளை மட்டும் ஈண்டு அகழ்ந்தெடுத்துக் காட்டுகிறேன்.
“தூயமேனிச் சுடர்விடு சோதி”
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை”
“விரிசுடராய் நின்ற மெய்யன்”
“செந்தழல் போற்றிருமேனி”
“ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே”
“பார் பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப்பரப்பே”
“சோதியாய் தோன்றும் உருவமே”
“சோதியே சுடரே சூழொளி விளக்கே”
“கடுந்தழற் பிழம்பன்ன மேனி”
எனவரூஉஞ் செம்மொழிகளை உற்று நோக்குக.

சேய் – சிவம்:

வெம்மை நெருப்பின் நிறமென்ன? செம்மையன்றோ? அச்செம்மையை சேயென்றும் சிவமென்றும் இயற்கை நுட்பமுணர்ந்த நம் முன்னோர்கள் போற்றினார்கள். “செய்யமேனியனே செய்வகை அறியேன்” என்றும், செஞ்சுடர் வெள்ளமே என்றும், “ஆடகச் சீர்மணிக் குன்றே” என்றும், வெம்பவள வெற்பிற்றேசுடைவாய்” என்றும், “செக்கர்போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்து” என்றும் வாதவூரடிகள் இறைவன் தீவண்ணத்தைச் சிறப்பித்துக் கூறுதல் காண்க.

சிவத்துக்குஞ் செம்மேனிக்கு முள்ள தொடர்பை “சிவனெனு நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” என்று அப்பர் சுவாமிகளும் விளக்கியிருத்தலை ஓர்க. வேறு பல ஆன்றோர்கள் இறைவன் தீவண்ணத்தைக் குறித்துப்பாடிய பாக்கள் பலப்பல. அவைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும்.

இறைவனது இயற்கை வடிவஞ் செக்கச் செவேலெனத் திகழ்தல் நோக்கி மாணிக்கவாசகனார் “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று வழுத்தி, அச்சிவனே மற்ற நாடுகளின் இயற்கைக்கேற்ப வெவ்வேறு பெயரான் அழைக்கப்படும். இறைவன் என்பதை அறிவுறுத்தப் பொதுவாக “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்றருளிச் செய்தார்.


இறைவன் என்னுந் தமிழ்ச் சொற்கு யாண்டும் நிறைந்துள்ள ஒருவன் அன்று பொருள். தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது என்நாட்டவர்க்கும் இறைவன் இத்தென்னாடுடைய சிவன் என்று போற்றப்படுகிறானென்க.

இறைவன் எவர் எப்பெயரான் போற்றினாலென்ன? மொழி வேற்றுமையைப் பொருள் வேற்றுமையாகக் கோடல் அறியாமை!!!

Sunday 12 October 2014

அஷ்ட பைரவர்கள் போற்றி



ஓம் கால பைரவா போற்றி

ஓம் கல்பாந்த பைரவா போற்றி

ஓம் குரோத பைரவா போற்றி

ஓம் கபால பைரவா போற்றி

ஓம் சம்ஹார பைரவா போற்றி

ஓம் உன்மத்த பைரவா போற்றி

ஓம் கண்ட பைரவா போற்றி

ஓம் உக்கிர பைரவா போற்றி

27 நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய சிவரூபங்கள்...



1,அசுவனி. ... கேது. ... கோமாதாவுடன் கூடிய சிவன்
2,பரணி. ... சுக்கிரன். ... சக்தியுடன் கூடிய சிவன்
3,கார்த்திகை. ... சூரியன். ... சிவன் தனியாக
4,ரோகிணி ... சந்திரன். ... பிறை சூடியப் பெருமான்
5,மிருகசீரிஷம். ... செவ்வாய். ... முருகனுடைய சிவன்
6,திருவாதிரை. ... ராகு. ... நாகம் அபிஷேகம் செய்யும் சிவன்
7,புனர்பூசம். ... குரு. ... விநாயகர், முருகனுடன் உள்ள சிவன்
8,பூசம். ... சனி. ... நஞ்சுண்டும் சிவன்
9.ஆயில்யம். ... புதன். ... விஷ்னுவுடன் உள்ள சிவன்
10,மகம். ... கேது. ... விநாயகரை மடியில் வைத்த சிவன்
11.பூரம். ... சுக்கிரன். ... அர்த்தநாரீஸ்வரர்
12,உத்ரம். ... சூரியன். ... நடராஜ பெருமான்-தில்லையம்பதி
13.ஹஸ்தம். ... சந்திரன். ... தியாண கோல சிவன்
14,சித்திரை. ... செவ்வாய். ... பார்வதி தேவியுடன் நந்தி அபிஷேகத்த தரிசிக்கும் சிவன்
15,சுவாதி. ... ராகு. ... சகஸ்ரலிங்கம்
16,விசாகம். ... குரு. ... காமதேனு மற்று,ம் பார்வதியுடன் உள்ள சிவன்
17,அனுஷம். ... சனி. ... ராமர் வழிபட்ட சிவன்
18,கேட்டை. ... புதன் ... நந்தியுடன் உள்ள சிவன்
19/மூலம். ... கேது. ... சர்ப்ப விநாயகருடன் உள்ள சிவன்
20,பூராடம். ... சுக்கிரன். ... சிவ சக்தி கணபதி
21,உத்திராடம். ... சூரியன். ... ரிஷபத்தின் மேலமர்ந்து பார்வதியின் அபிஷேகத்தை கானும் சிவன்
22,திருவோனம். ... சந்திரன். ... சந்திரனில் அமர்ந்து விநாயகரை ஆசிர்வதிக்கும் சிவன்
23,அவிட்டம். ... செவ்வாய். ... மணக்கோலத்துடன் உள்ள சிவன்
24,சதயம். ... ராகு. ... ரிஷபம் மீது சத்தியுடன் உள்ள சிவன
்25பூராட்டாதி. ... குரு. ... விநாயகர் மடியின் முன்புறமும் சத்தியை பின்புறமும் இனைத்து காட்சி தரும் சிவன்
26 .உத்திராட்டாதி ... சனி. ... கயிலாயமலையில் காட்சி தரும் சிவன்
27.ரேவதி. ... புதன். ... குடும்பத்துடன் உள்ள சிவன்