தக்கன் சிவபெருமானை மதியாது சிவநிந்தனையே இல்லாமலிருந்தான். இதனையறிந்தோர் தக்கனிடம் சென்று சிவபெருமான் ஒருவரே கடவுள் அவரை பகைக்க வேண்டாமென்றும், அவரை வணங்கி வரவும் பணித்தனர். இதைக்கேட்ட தக்கனும் கையிலை சென்றான். ஆனால் அங்கேயிருந்த கணநாதர் தக்கனை திருப்பியனுப்பினார். இதனால் மனம் நொந்த தக்கன் தன் தலைநகர் திரும்பி அனைவரிடத்திலும் கையிலையில் நடந்ததைக் கூறி சிவபெருமானை வணங்க வேண்டாமெனத் தடுத்தான். அதற்கு தேவர்குழாமும் ஒப்புக் கொண்டது, பிரமனைத் தவிர. ஒருமுறை பிரமன் யாகமொன்று நடத்த இருந்தான். அதற்கு அழைக்க சிவபெருமானை அழைத்துவர கையிலை சென்றான். அவரையும் அழைத்தான். அவரோ தனக்கு பதிலாக நந்திதேவரை அனுப்புவதாகக் கூறினார். அதன்படி யாகத்திற்கு நந்திதேவர் தனது பூத கணங்களுடன் சென்றார். இதனைக்கண்ட தக்கன் சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல், திருமாலு<க்கு கொடுக்கச் சொல்லி கட்டாயப்படுத்தினான். இதனால் கோபமுற்ற பிரமன் தக்கனின் தலை துண்டாகவும், அவனது கூட்டாளிக்கு சூரபத்மனால் ஆபத்து உண்டு எனவும் சாபம் விடுத்தார். இதனால் அவ்வேள்வி தடைபட்டது. இதற்கிடையே தக்கன் ஒரு யாகம் நடத்த இருந்தான். அதனால் சிவபெருமானுக்கு அவிர்பாகம் கொடுக்காமல் நடத்த நினைத்தான். உடனே தத்சி முனிவர் அதுமுறையற்றது, சிவபெருமான் இன்றியாகம் செய்தல் கூடாது என்றார். பார்வதிதேவியும் அவிர்பாகம் பெற உக்கிரமாகாளி, வீரபத்திரர் உடன் வந்திருந்தார். பார்வதி தேவி கேட்டும் அவர்க்குரிய அவிர்பாகம் மறுக்கப்பட்டது. இதனால் தேவர்கள் அனைவரும் ஊமை போல் காணப்பட்டனர். இதனால் பெருங்கோபம் கொண்ட வீரபத்திரர் தனது தண்டத்தால் திருமாலை அடிக்க அவர் வீழ்ந்தார். பின் பிரமன் வீழ்ந்தார். வீரபத்திரர் சந்திரனைத் தன் காலடியில் தேய்த்தார். வீரபத்திரிரன் பூதகணங்கள் தக்கன் இருப்பிடம் யாகசாலை, கோட்டை, மதில் என அனைத்தையும் அழித்தனர். வீரபத்திரர் அனைத்து தேவர்களையும் துவம்சம் செய்தார். தேவகணங்களை வதைத்தார். தேவர்களின் மனைவியர், இந்திராணி, தக்கனின் மனைவியர் என அனைவரையும் பார்வதி தேவியும், காளியும் துவம்சம் செய்தனர். அனைவரும் ஏதாவது ஒரு குறைபாட்டுடன் இருக்கும்படி வீரபத்திரர் செய்தார். போர் உச்சத்தை அடைந்ததும் சிவபெருமான் தோன்றி வீரபத்திரரை சாந்தப்படுத்தினார். பார்வதியின் உத்தரவிற்கேற்ப மாண்ட அனைவரும் உயிர்பெற்றனர். தக்கனும் பிழைக்க வைக்கும்படி பிரமன் வேண்ட, உடனே வீரபத்திரர் ஒரு ஆட்டுத்தலை அவனுடலில் பொருத்தி அவனை உயிர்பித்தார். அவன் பார்வதி-சிவபெருமான் தரிசனம் பெற்று சிவகணங்களில் ஒன்றானான். சிவபெருமான் தன்னை வணங்காத தக்கனின் வேள்வியை அழிக்க எடுத்த மூர்த்தமே "தட்சயக்ஞஷத மூர்த்தி யாகும். தரங்கம்பாடி - செம்பனார் கோயில் அருகே உள்ளத் தலம் திருப்பறியலூர் ஆகும். இறைவன் திருநாமம் வீரட்டேசர் என்பதும், இறைவி திருநாமம் இளம்கொம்பனையாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். வில்வார்ச்சனையும், பால் நைவேத்தியமும் திங்கள், பிரதோஷம் அன்று கொடுக்க பகைவர் தொல்லைத் தீரும். கோர்ட் வழக்கு சாதகமாகும். தம்பதியர் ஒற்றுமை ஒங்கும்.
சிவன் அவன் என்சிந்தையுள், நின்ற அதனால் அவன் அருளாலே, அவன்தாள் வணங்கி!!!!
Saturday, 19 July 2014
44. தட்சயக்ஞஷத முர்த்தி

Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment