தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன்!
“தென்னாடுடைய சிவனே போற்றி! – எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்னும் பெருமொழியின் பொருள் வெள்ளிடைமலை. தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது எந்நாட்டவர்க்கும் இறைவன் தென்னாடுடைய சிவன் என்பது அத்திருவாசகத்தின் கருத்து.
எந்நாட்டுக்கும் இறைவன் ஒருவனே. அவ்வொருவனுக்குப் பல நாட்டு மொழிகளில் பல பெயர்கள் வழங்குகின்றன. அப்பன்மைப் பெயர்கள் பெரிதும் அவ்வவ்நாட்டின் இயற்கை நிலையையொட்டிப் பிறந்திருத்தல் வேண்டும். பெயர் பல கொண்டு கடவுளர் பலர் என்னும் முடிவுக்கு வருதல் அறியாமை.
“ஒருநாமம் ஓருருவம் ஒன்றுமில்லார்க்கு ஆயிரந்திருநாமம் பாடி நாம் தெள்ளேணங் கொட்டாமோ” என்றார் மாணிக்கவாசகர். “ஒன்றே குலம் ஒருவனே தேவன்” என்றார் திருமூலர்.
சிவம்:
தென்னாட்டவராகிய நாம் இறைவனைச் சிவம் என்னும் செம்மொழியால் வழுத்துகிறோம். தென்மொழிவல்லார் சிவம் என்பதற்குச் செம்மையென்று பொருள் கூறுகிறார். செம்மை யெனுஞ்சொல் பல பொருளுடையது. ஈண்டு எடுத்துக் கொண்ட பொருளுக்கேற்பச்செம்மை யன்பதற்குச் செந்நிறம் என்னும் ஒரு பொருளை மட்டும் கொள்கிறேன்.
தென்னாட்டார் பரம்பொருளைச் செந்நிறமாகக் கண்டு, அதனைச்சேயென்றுஞ் சிவமென்றும் போற்றலாயினர். இதற்குக் காரணமென்ன?
இறையும் இயற்கையும்:
இறைவன் ஒரு நாமம் ஓருருவம் ஒன்றுமில்லாதவன். அவன் அறிவாய் யாண்டும் நீக்கமற நிற்பவன். “இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் என்று எழுதியுங்காட்டொணாதே” என்றார் அப்பர் சுவாமிகள்.
இத்தகைய அறிவுப் பொருளின் உண்மையை எங்ஙனம் உணர்வது? அதன் வடிவான இயற்கையைக் கொண்டே அதன் உண்மையையுணர்தல் வேண்டும். இயற்கை இறைவனது உடல். அவ்வுடலுள் உயிராயிருப்பவன் இறைவன். நமது உடலுள் உயிர் எங்ஙனம் நிலவுகிறதோ அங்ஙனே இயற்கையுள் இறைவன் நிலவுகிறான். கண்கூடாகக் காணும் நமது உடலைக்கொண்டே நமது உயிருண்மை உணர்கிறோம். அதுபோலவே கண்கூடாகக் காட்சியளிக்கும் இயற்கை வடிவங்களைக் கொண்டே இறையுண்மை உணரல் வேண்டும். இயற்கைவழி இறைவனை உணர்ந்தவரே ஞானிகளெனப்படுவர்.
இயற்கையில் வெம்மை:
இயற்கை முதல் ஒன்றாயினும், அது காரியப்படும்போது பல இயல்புடையதாய்ப் பரிணமிக்கிறது. நமது நாட்டின் இயற்கை நிலை என்ன? நமது நாடு வெம்மை செறிந்த நாடு என்று எவருங் கூறுவர்.
நிரட்ச ரேகை (EQUATOR) நமது நாட்டின் பாங்கர் பாய்ந்து செல்கிறது. அக்கோட்டின் பாங்கருள்ள நாடுகள் வெம்மை செறிந்தனவாயிருத்தல் இயல்பு. நமது நாட்டின் காரியங்களைத் துருவித் துருவி ஆய்ந்து ஆய்ந்து சென்றால் அவைகளின் காரணங்கள் யாவும் வெம்மை மயமாயிருத்தல் பெறலாம். அவ்வியற்கை வெம்மை வழி இறைவனை நமது நாட்டு பெரியோர்கள் உணர்ந்தார்கள்.
இறைவனுடல் இயற்கை யென்று மேலே சொல்லப்பட்டிருக்கிறது. நமது நாட்டின் இயற்கையோ வெம்மையை அடிப்படையாகக் கொண்டது. ஈண்டு இறைவனுக்குரிய இயற்கை வடிவம் எத்தகையதாயிருத்தல் வேண்டும் என்று உன்னுவோமாக.
தீவண்ணம்:
அதனை வெம்மைக்குரிய நெருப்பு வடிவமென்று விளக்க வேண்டியதில்லை. அந்நெருப்பு மேனியைப் பெரியோர்கள் பலவாறு புகழ்ந்து போற்றியிருக்கிறார்கள். அவ்வுரைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும்.
மாணிக்கவாசகனார் அருளிய திருவாசகத்தினின்றுஞ் சில பொன்மொழிகளை மட்டும் ஈண்டு அகழ்ந்தெடுத்துக் காட்டுகிறேன்.
“தூயமேனிச் சுடர்விடு சோதி”
“ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்சோதியை”
“விரிசுடராய் நின்ற மெய்யன்”
“செந்தழல் போற்றிருமேனி”
“ஈறிலாக் கொழுஞ்சுடர்க் குன்றே”
“பார் பதம் அண்டம் அனைத்துமாய் முளைத்துப் பரந்ததோர் படரொளிப்பரப்பே”
“சோதியாய் தோன்றும் உருவமே”
“சோதியே சுடரே சூழொளி விளக்கே”
“கடுந்தழற் பிழம்பன்ன மேனி”
எனவரூஉஞ் செம்மொழிகளை உற்று நோக்குக.
சேய் – சிவம்:
வெம்மை நெருப்பின் நிறமென்ன? செம்மையன்றோ? அச்செம்மையை சேயென்றும் சிவமென்றும் இயற்கை நுட்பமுணர்ந்த நம் முன்னோர்கள் போற்றினார்கள். “செய்யமேனியனே செய்வகை அறியேன்” என்றும், செஞ்சுடர் வெள்ளமே என்றும், “ஆடகச் சீர்மணிக் குன்றே” என்றும், வெம்பவள வெற்பிற்றேசுடைவாய்” என்றும், “செக்கர்போலுந் திருமேனி திகழ நோக்கிச் சிலிர்சிலிர்த்து” என்றும் வாதவூரடிகள் இறைவன் தீவண்ணத்தைச் சிறப்பித்துக் கூறுதல் காண்க.
சிவத்துக்குஞ் செம்மேனிக்கு முள்ள தொடர்பை “சிவனெனு நாமம் தனக்கேயுடைய செம்மேனி எம்மான்” என்று அப்பர் சுவாமிகளும் விளக்கியிருத்தலை ஓர்க. வேறு பல ஆன்றோர்கள் இறைவன் தீவண்ணத்தைக் குறித்துப்பாடிய பாக்கள் பலப்பல. அவைகளை ஈண்டு விரிக்கிற் பெருகும்.
இறைவனது இயற்கை வடிவஞ் செக்கச் செவேலெனத் திகழ்தல் நோக்கி மாணிக்கவாசகனார் “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று வழுத்தி, அச்சிவனே மற்ற நாடுகளின் இயற்கைக்கேற்ப வெவ்வேறு பெயரான் அழைக்கப்படும். இறைவன் என்பதை அறிவுறுத்தப் பொதுவாக “எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி” என்றருளிச் செய்தார்.
இறைவன் என்னுந் தமிழ்ச் சொற்கு யாண்டும் நிறைந்துள்ள ஒருவன் அன்று பொருள். தென்னாடுடைய சிவனே எந்நாட்டவர்க்கும் இறைவன் அல்லது என்நாட்டவர்க்கும் இறைவன் இத்தென்னாடுடைய சிவன் என்று போற்றப்படுகிறானென்க.
இறைவன் எவர் எப்பெயரான் போற்றினாலென்ன? மொழி வேற்றுமையைப் பொருள் வேற்றுமையாகக் கோடல் அறியாமை!!!

No comments:
Post a Comment